» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வங்கித் தலைவராக பெண் தொழில் அதிபர் தேர்வு: சவுதி அரேபியாவில் முதன் முறை

திங்கள் 8, அக்டோபர் 2018 9:19:25 AM (IST)



சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவில் இயங்கும் சவுதி பிரிட்டிஷ் வங்கி மற்றும் அலவ்வால் வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வங்கி 17.2 பில்லியன் அமெரிக்க டாலர் (12,560 கோடி) மதிப்புடன் நாட்டின் மிகப்பெரிய 3ஆவது வங்கியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், இந்த புதிய வங்கியின் தலைவராக சவுதி அரேபியாவின் பிரபல பெண் தொழில் அதிபர் லுப்னா, அல் ஓலயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லுப்னா அல் ஓலயன் அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்தார். போர்பஸ் இதழின் மத்திய கிழக்கு நாடுகளில் 2018ஆம் ஆண்டு ஆதிக்கம் நிறைந்த பெண்களுக்கான பட்டியலில் 86 ஆவது இடத்தை பெற்றிருந்தார். இவர், தங்களது குடும்பத்தினர் நடத்திவரும் தொழில் குழுமத்துக்கு தலைமை வகித்து வருகிறார். சவுதி அரேபியாவின் நிதி துறையில் அந்நாட்டின் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார்.

சவுதி அரேபியாவை நவீனமயமாக்கும் முயற்சியில் பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மான் ஈடுபட்டு வருகிறார். சவுதி வி‌ஷன் 2030 என்ற திட்டத்தின்படி அங்கு வாழும் பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டது. பழமைவாதத்தை காலம் காலமாக கடைபிடித்து வரும் சவுதி அரேபியாவில் முதல் முறையாக வங்கியின் தலைவராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory