» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல்: இந்தியா, சீனாவுக்கு டிரம்ப் மிரட்டல்
வியாழன் 11, அக்டோபர் 2018 12:39:30 PM (IST)
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடையால், ஈரானிடம் எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகள் அதனை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. இந்தியாவும் எத்தகைய முடிவு எடுக்கும் என்று உலக நாடுகள் உற்று நோக்கிய நிலையில், ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் இறக்குமதி செய்யப்படும் என்று இந்தியா தெரிவித்தது. அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறி இந்தியா, இந்த முன்னெடுப்பை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் இந்தியா, சீனா உட்பட சில நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் " நவம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகும் ஈரானிடம் இருந்து எண்ணைய் கொள்முதல் செய்யும் நாடுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என மிரட்டல் தொனியில் பதிலளித்தார்.
அமெரிக்காவின் பொருளாதார தடைகளை பொருட்படுத்தாத இந்தியா, வரும் மாதம் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணைய் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று உறுதிப்படுத்தினார். இந்தியன் ஆயில் கார்பரேஷன், மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெடு (MRPL) ஆகிய இரண்டு அரசு நிறுவனங்களும் ஈரானிடம் இருந்து 1.25 மில்லியன் டன் கச்சா எண்ணைய் இறக்குமதியை அடுத்த மாதம் செய்ய முடிவெடுத்துள்ளது.
மக்கள் கருத்து
ஒருவன்Oct 13, 2018 - 05:31:08 PM | Posted IP 141.1*****
சாமி அவர்களுக்கு காங்கிரஸ் வேற , டிரம்ப் வேற ... மூடிட்டு போகவும்
சாமிOct 12, 2018 - 02:07:22 PM | Posted IP 162.1*****
தம்பி - எங்கள் தல உன் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாது - அவர் கைகட்டி காங்கிரஸ் கூடாரத்தில் இருந்து வந்தவர் அல்ல
மேலும் தொடரும் செய்திகள்

வாஷிங்டனில் அமெரிக்க-சீனா கடைசிச் சுற்று வர்த்தக பேச்சுவார்த்தை
சனி 23, பிப்ரவரி 2019 8:55:05 AM (IST)

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:17:37 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:39:06 PM (IST)

புல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:21:41 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்
புதன் 20, பிப்ரவரி 2019 11:31:58 AM (IST)

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

ஒருவன்Oct 13, 2018 - 05:33:18 PM | Posted IP 141.1*****