» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானிடம் கச்சா எண்ணெய், ரஷியாவிடம் ஏவுகணை வாங்குவதால் இந்தியாவுக்கு பலனில்லை: அமெரிக்கா

சனி 13, அக்டோபர் 2018 10:49:43 AM (IST)

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்க முடிவு செய்திருப்பது எந்த வகையிலும் இந்தியாவுக்கு பலன் அளிக்காதுஎன்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஈரானுடன் 2015-ம் ஆண்டு செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அண்மையில் அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் வருகிறது. மேலும் அடுத்த மாதம் (நவம்பர்) 4-ம் தேதி தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என்றும் அமெரிக்கா கெடு விதித்து உள்ளது. 

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் அமெரிக்காாவின் இந்த எச்சரிக்கை இந்தியாவுக்கு மேலும் இக்கட்டான நிலையை ஏற்படுத்தி உள்ளது. என்றபோதிலும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெயை இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகும், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான உத்தரவை மத்திய அரசுக்கு சொந்தமான 2 எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு இருப்பதாக அண்மையில் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்து இருந்தார்.

இதேபோல் ரஷியாவில் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்குவதற்கும் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஆனால் ரஷியாவிற்கு பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா, இந்த ஏவுகணைகணை இந்தியா வாங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஹீதர் நயூர்ட் வாஷிங்டன் நகரில் நிருபர்களிடம் கூறியதாவது: "ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை உலக நாடுகள் அனைத்தும் பின்பற்றவேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. இதையும் மீறி நவம்பர் 4-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து எந்த நாடும் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது.

மாறாக இறக்குமதி செய்யப்போகும் நாடுகளைப் பற்றி கேட்கிறீர்கள். இந்த தடை குறித்து உலகம் முழுவதும் எங்களது நட்பு மற்றும் கூட்டணி நாடுகளுடன் பேசி வருகிறோம். ஈரான் மீதான எங்களுடைய கொள்கை நிலைப்பாட்டை அந்த நாடுகளுக்கு தெள்ளத் தெளிவாக தெரிவித்தும் வருகிறோம். ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 டிரைம்ப் ரக ஏவுகணைகளை வாங்க முடிவு செய்திருப்பது எந்த வகையிலும் இந்தியாவுக்கு பலன் அளிக்காது.ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவின் நடவடிக்கை குறித்து நாங்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அதிபர் டிரம்ப் விரைவில் எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

அருண்Oct 15, 2018 - 12:36:35 AM | Posted IP 157.5*****

நல்லா பண்றீங்க சார். நல்லா பண்றீங்க...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory