» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்!

செவ்வாய் 16, அக்டோபர் 2018 10:20:55 AM (IST)தொழில்நுட்ப வல்லுனரும், மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரும், வல்கனின் நிறுவனரான பால் ஆலன்(65), லிம்போமா எனும் ரத்தப் புற்றுநோயால் காலமானார். 

கடந்த 1975-ஆம் ஆண்டில், பில்கேட்ஸ்(19) மற்றும் பால் ஆலன்(22) இருவரும் இணைந்துத் துவக்கியதுதான் மைக்ரோசாஃப்ட். அந்த நிறுவனம் மூலம் கம்ப்யூட்டர் மூலமாக புதிய புரட்சியை செய்து பெரும் பாணக்காரர்கள் ஆனார்கள். உலகளவில் 46-வது பெரிய கோடீஸ்வரராக அறியப்படும் பால் ஆலன், கேட்ஸுக்கும் இடையேயான ஏற்பட்ட நட்பின் விரிசலால் 8 ஆண்டுகள் கழித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். 

2009-ஆம் ஆண்டு புற்றுநோயுடன் போராடி வென்ற ஆலனுக்கும் மீண்டும் புற்றுநோய் வந்துள்ளதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ஆலன் திங்கள்கிழமை மதியம் சிகிச்சை பலனின்றி சியாட்டில் உயிரிழந்தார். 20.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு சொந்தக்காரரான ஆலனுக்கு ஈர்த்த மற்றொன்று விளையாட்டு.  நேஷனல் கால்பந்து லீக்கைச் சேர்ந்த சியாட்டல் சீஹாக்ஸ் மற்றும் நேஷனல் கூடைப்பந்து அமைப்பைச் சேர்ந்த போர்ட்லேண்ட் டிரெயில் பிளேஸர்ஸ் அணிகளின் உரிமையாளர் ஆவார்.

ஆலன் மறைவு குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெள்ளா வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கும், தொழில்துறைக்கும் அவரின் பங்களிப்பு அளப்பரியது. தொடர்ந்து அமைதியாக பணிபுரிந்தாலும், தொழில்நுட்பத்தில் பல உயரங்களை அவர் தொட்டவர். அவரது புதியதாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், தனது எல்லைகளை விரிவாக்கும் திறன் ஆகியவற்றைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். என்னைப் போலவே, மைக்ரோசாப்ட்டில் இருக்கும் அனைவரையும் அவர் தன்வசம் ஈர்த்திருந்தார். அவரது ஆன்மா இறைவனில் காலடியில் உறங்கட்டும் எனக் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory