» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் நிறுத்தப்பட்டது

புதன் 7, நவம்பர் 2018 1:27:56 PM (IST)

அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இந்த வருடம் நடைபெறவில்லை. 

அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கும் இந்திய வம்சாவளி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த 2003-ஆம் வருடம் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவருக்குப் பின் வந்த அதிபரான ஓபாமாவும் தடையின்றி அதனை அப்படியே தொடர்ந்து வந்தார். இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் 15 வருடங்களாக பின்பற்றப்பட்டு வந்த வருடாந்திர தீபாவளி கொண்டாட்டம் இவ்வருடம் நடைபெறவில்லை. 

தற்போது அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. திங்கள் கிழமை வரை பிரசாரம் நடைபெற்ற நிலையில், செவ்வாயன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் உடனடியாக தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியுள்ளது. எனவே இதன் காரணமாக இம்முறை 15 வருட பாரம்பரியத்திற்கு மாற்றாக தீபாவளி இந்த வருடம் கொண்டாடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory