» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தீவிரவாதக் குற்றச்சாட்டில் நண்பரைச் சிக்கவைக்க முயற்சி: பிரபல ஆஸி. வீரரின் சகோதரர் கைது!

செவ்வாய் 4, டிசம்பர் 2018 11:25:46 AM (IST)

தீவிரவாதக் குற்றச்சாட்டில் நண்பரைச் சிக்கவைக்க  போலியாக ஆவணங்களை உருவாக்கியதாக பிரபல ஆஸி. வீரர் கவாஜாவின் சகோதரை ஆஸ்திரேலியக் காவல்துறை கைது செய்துள்ளது.

சிட்னியில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல்லைக் கொலை செய்வதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கமீர் நிஜாமூதீனைக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸி. காவல்துறை கைது செய்தது. ஆனால் இலங்கையைச் சேர்ந்த நிஜாமுதீன் எழுதியதாக நம்பப்பட்ட தாக்குதல் குறித்த குறிப்புகளை கவாஜாவின் சகோதரர் அர்சலன் எழுதியதாகக் காவல்துறை கண்டுபிடித்தது. தவறாகக் கைது செய்யப்பட்ட நிஜாமுதீன் கடந்த அக்டோபர் மாதம் விடுவிக்கப்பட்டார். அவருக்கு வழக்கு தொடர்பாக ஏற்பட்ட செலவுகளைக் காவல்துறை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒரு பெண் தொடர்பாக இருவருக்கும் உண்டான பகையில் நிஜாமுதீனைச் சிக்க வைக்க பொய்யான தீவிரவாதச் செயல் பற்றிய குறிப்புகளை அர்சலன் எழுதியதாக விசாரணையில் காவல்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து முறையற்ற நடத்தைக்காகவும் பொய்யாக ஆவணம் தயாரித்துத் தீவிரவாதக் குற்றச்சாட்டில் சிக்க வைக்க முயன்றதற்காகவும் 39 வயது அர்சலனைக் காவல்துறை கைது செய்தது. பிறகு அர்சலன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய சகோதரர் கைதானது குறித்து உஸ்மான் கவாஜா கூறியுள்ளதாவது: இந்த வழக்கைக் காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பாக என்னால் கருத்து எதுவும் கூறமுடியாது. எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory