» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதுதான் எனது விருப்பம்: பாக். பிரதமர் இம்ரான்கான் கருத்து

புதன் 9, ஜனவரி 2019 11:20:01 AM (IST)

"இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம், ஆனால், அதனை இந்தியா நிராகரிக்கிறது" என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு இம்ரான்கான்  அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- "இந்தியாவும், பாகிஸ்தானும் அணுசக்தி நாடுகளாகும். இந்த இருநாடுகளும் போர் குறித்தோ அல்லது மறைமுக போர் குறித்தோ சிந்தித்து பார்க்கக் கூடாது. 

ஏனெனில், இது நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைதி பேச்சு ஒன்றுதான் சிறந்த வழியாகும். அணுசக்தி திறன் கொண்ட இருநாடுகளும் போரிடுவது, சம்பந்தப்பட்ட இருநாடுகளும் தற்கொலை செய்து கொள்வதற்கு சமமாகும். இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பமாகும். ஆனால் எனது முயற்சிகளை இந்தியா நிராகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் உரிமைகளை இந்தியாவால் ஒருபோதும் ஒடுக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory