» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை

வெள்ளி 8, பிப்ரவரி 2019 11:48:16 AM (IST)

இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார். இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 

விசா கலாம் முடிந்த பின்னரும் இந்தோனேசியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்களை அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அத்துடன் குடியுரிமை அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory