» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மசூதி துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் பலியான துயர சம்பவம்: நியூஸிலாந்து குற்றவாளி ஆஜர்!!

சனி 16, மார்ச் 2019 12:32:43 PM (IST)நியூஸிலாந்தில் துப்பாக்கிச் சூட்டில் 49பேர் பலியான சம்பவத்தில் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட் சர்ச் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில் 49 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) ஆஜர்படுத்தப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், நீதிமன்றத்தில் பிரெண்டன் டாரன்ட் ஏதும் பேசவில்லை. அவருக்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  வழக்கறிஞர் ஜாமீன் ஏதும் கூறவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் மீதான குற்றத்துக்கான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர் தண்டனைகளை எதிர்கொள்ள இருக்கிறார். கைது செய்யப்பட்ட பிற நபர்களுக்கு துப்பாக்கிச் சூட்டில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.கைது செய்யப்பட்ட எவருக்கும் குற்றப் பின்னணி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து  நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்ரென் கூறும்போது, முக்கியக் குற்றவாளி துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமம் வைத்திருக்கிறார். அவர் எவ்வாறு நியூஸிலாந்துக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.  நான் உங்களுக்கு ஒன்றை மட்டும் தற்போது கூறிக்கொள்கிறேன். நமது துப்பாக்கிச் சட்டம் மாற்றத்துக்கு உள்ளாகப்படும் என்றார். ட்ரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பல இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory