» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு சுற்றுப்பயணம்: அதிபர் முகம்மது சோலியுடன் சந்திப்பு.

திங்கள் 18, மார்ச் 2019 4:52:57 PM (IST)இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அந்நாட்டின் அதிபரை சந்தித்து பேசினார்..

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு நேற்று  புறப்பட்டுச்சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலியை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, முகமது சோலி அதிபராகப் பதவியேற்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே பலவீனம் அடைந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சுஷ்மா சுவராஜ் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory