» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கூகுள் நிறுவனத்திற்கு 168 கோடி டாலர் அபராதம்: ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

வியாழன் 21, மார்ச் 2019 10:44:27 AM (IST)

கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் 168 கோடி டாலர் அபராதம் விதித்தது. இது கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் விதிக்கும் மூன்றாவது அபராதமாகும்.

கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தகமான ஆட்சென்ஸ் (AdSense) மூலம் போட்டி விளம்பரதார்களுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் கூகுள் நஷ்டம் ஏற்படுத்தியதாக ஐரோப்பிய யூனியன் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. கூகுளின் ஆட்சென்ஸை மட்டுமே இணையதளங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூகுள் நிர்பந்தித்துள்ளது. இணையதளங்களுடன் அதற்கேற்றவாறு ஒப்பந்தம் போட்டு கூகுளின் போட்டி நிறுவனங்கள் தங்கள் விளம்பரங்களை வெளியிட முடியாமல் கூகுள் நிறுவனம் தடுத்துள்ளது.

இதன் மூலம் கூகுள் நிறுவனம் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறியுள்ளது. அதற்கான தண்டனையாக கூகுள் நிறுவனத்தின் மீது 168 கோடி டாலர் அபராதம் விதிக்கப்படுகிறது என ஐரோப்பிய யூனியன் போட்டி ஆணையர் மார்கரெட் வெஸ்டேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதே போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த 2017ம் ஆண்டு கூகுள் நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் 300 கோடி டாலர் அபராதம் விதித்தது. அதே போல் கடந்த 2018 ஆண்டு கூகுள் நிறுவனம் மீது 500 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory