» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கிறிஸ்ட்சர்ச் தாக்குதல் எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கி விற்பனைக்கு தடை: பிரதமர் அறிவிப்பு

வியாழன் 21, மார்ச் 2019 12:55:54 PM (IST)

கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் தாக்குதல் எதிரொலியாக நியூசிலாந்தில் துப்பாக்கிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக பிரதமர் ஆர்டன் அறிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் (25) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். 

அவன் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிபதி, அவனை ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த தாக்குதலுக்கு அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். நியூசிலாந்து சட்டப்படி ஒருவர் 16 வயதிலேயே சாதாரண துப்பாக்கியையும், 18 வயதில் தானியங்கி துப்பாக்கியையும் வாங்க முடியும். எனவே, நாட்டில் நடைமுறையில் இருக்கும் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குள் துப்பாக்கி சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முடிவெடுக்கப்படும் என பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நேற்று ஜெசிந்தா செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார். இதில் பேசிய அவர், ”ராணுவ பாணியிலான பாதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் அசால்ட் ரைபிள்கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது” என்று அறிவித்தார். ”அதேபோல்,துப்பாக்கிகள் சுடும் வேகத்தை அதிகரிக்க உதவும் துப்பாக்கி மேகசின்கள் மற்றும் பம்ப் ஸ்டாக்கை ஒத்த கருவிகள் ஆகியவற்றுக்கும் உடனடியாக தடை விதிக்கப்படும்” என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory