» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் ரசாயன ஆலையில் வெடி விபத்து: பலி எண்ணிக்கை 44 ஆக உயர்வு

வெள்ளி 22, மார்ச் 2019 5:21:58 PM (IST)



சீனாவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்க்சூ மாகாணத்தில் யான்செங் என்ற நகரில் உரப்பொருட்கள் தயாரிக்கும் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், நேற்று உள்ளூர் நேரம் பிற்பகல் 2.50 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் சிக்கிய தொழிலாளர்கள் 44 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், 58 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

தொழிற்சாலையில் இருந்து 88 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக அவசர் மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பெரும் வெடிவிபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் அருகாமையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால், வெளியாகியுள்ள நச்சுக்கசிவால், அருகாமையில் உள்ள மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வேதியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory