» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம்: இம்ரான் கான் வரவேற்பு

சனி 23, மார்ச் 2019 12:32:05 PM (IST)

பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தான் தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் மோடி வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அந்த வாழ்த்துக்கடிதத்தில், தேசிய தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

பயங்கரவாதம் வன்முறை இல்லாத சூழலில்,ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பிரதமர் மோடி வாழ்த்துச்செய்தி அனுப்பியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். மேலும், மோடியின் வாழ்த்துச்செய்தியை வரவேற்பதாகவும், இரு நாடுகளும் காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண விரிவான ஆலோசனை நடத்துவதற்கான நேரம் வந்துள்ளதாகவும் தனது டுவிட்டில் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ள சூழலில், பிரதமர் மோடி, இம்ரான் கானுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். நேற்று இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததால், கோபம் அடைந்த இந்தியா அந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருந்தது. இந்த சூழலில் தான், பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமருக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார். 

இந்தியா தூதரக உறவுகள் வைத்துள்ள நாடுகளின் தேசிய தினத்திற்கு, நாட்டின் பிரதமர் வாழ்த்துச்செய்தி அனுப்புவது மரபாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அந்த வகையில்தான் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி, வழக்கமான வாழ்த்துச்செய்தியை அனுப்பியதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இம்ரான்கானுக்கு வழங்கப்பட்ட வாழ்த்துச்செய்தியில், பிரதமர் மோடி கையெழுத்திடவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory