» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பேஸ்புக் ஆய்வு : உலகின் மிக பிரபலமான தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடி முதலிடம்

வெள்ளி 12, ஏப்ரல் 2019 4:59:22 PM (IST)

மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.

மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு ஆய்வு நடத்தியது. பேஸ்புக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி குவித்த தலைவர்கள் பட்டியலிடப்பட்டனர். அதில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்து, மிக பிரபலமான உலக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பேஸ்புக்கில், அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 4 கோடியே 35 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது. இந்திய பிரதமர் என்ற பேஸ்புக் பக்கத்துக்கு ஒரு கோடியே 37 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, 2-ம் இடம்தான் கிடைத்துள்ளது. அவரது தனிப்பட்ட பக்கத்துக்கு 2 கோடியே 30 லட்சம் ‘லைக்ஸ்’ கிடைத்துள்ளது. ஜோர்டான் ராணி ரனியா, பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ ஆகியோர் 3 மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளனர். கானா அதிபர் நானா அகுபோ, எகிப்து அதிபர், ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், மெக்சிகோ அதிபர், அர்ஜெண்டினா அதிபர் பிரான்ஸ் அதிபர், ருமேனியா அதிபர் ஆகியோரும் இப்பட்டியலில் உள்ளனர். 


மக்கள் கருத்து

அண்ணாக்கன்Apr 17, 2019 - 11:52:30 AM | Posted IP 162.1*****

சாமி, நீர் பூணூல் போட்ட இந்துவா? இல்ல பூணுல் போடா தகுதி இல்லாத இந்துவா? இத சொல்லிட்டு பெருமை படும்.

சுந்தரன் தெய்வேந்திரன்Apr 17, 2019 - 11:50:35 AM | Posted IP 162.1*****

காரி துப்புரத்திலா? ஆமா இவரு என்ன படிச்சுருக்கிறார்? 125 கோடி மக்களில் நல்ல, படித்த , திறமையான ஆள் இல்லையா?

ஒருவன்Apr 16, 2019 - 11:15:11 PM | Posted IP 162.1*****

முகநூலில் எங்கே பார்த்தலும் மோடியை வச்சி செஞ்சிட்டு இருக்காங்க ...அதானே முகநூலில் வச்சி கலாய்ப்பதில் முதலிடம் ...

என் பெயர் தமிழ்Apr 13, 2019 - 06:51:15 PM | Posted IP 162.1*****

உலக அளவிலா..??? மோடி னு வாறதெல்லாமே போலிதான் போல..

பாலாApr 13, 2019 - 10:00:16 AM | Posted IP 141.1*****

இன்னும் என்னென்ன கூத்து நடக்க போகுதோ..

சாமி 2Apr 12, 2019 - 11:41:17 PM | Posted IP 162.1*****

எல்லாம் காசு கொடுத்து தான்

சாமிApr 12, 2019 - 06:39:17 PM | Posted IP 172.6*****

பெருமைப்படுகிறோம் - ஒரு உண்மையான இந்தியனாய்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory