» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அகதிகளுக்கு ஆதரவான நகரங்களுக்கு அனுப்ப டிரம்ப் திட்டம்

ஞாயிறு 14, ஏப்ரல் 2019 10:32:14 PM (IST)

அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள சட்டவிரோத குடியேறிகளை அகதிகளுக்கு ஆதரவான அமெரிக்க நகரங்களுக்கு அனுப்புவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

மெக்சிகோ எல்லை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு முன் சட்டவிரோதமாக ஊடுருவிய குடியேறிகள் அகதிகள் முகாமில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக குடியேற்ற சட்டங்களை கடுமையாக்கும் வகையில் பல திருத்தங்களை கொண்டு வர அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் அவரது முயற்சிகளுக்கு மனித உரிமை அமைப்புகள் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியினர் எதிராக உள்ளனர்.

மேலும் குடியேறிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரிப்பது போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்கள்.இந்நிலையில் சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டார்.‘‘அமெரிக்காவின் ஆபத்தான குடியேற்ற சட்டத்தை மாற்ற ஜனநாயக கட்சியினர் விரும்பவில்லை. எனவே அகதிகளுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ள நகரங்களுக்கு சட்டவிரோத குடியேறிகளை அனுப்புவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். இது இடதுசாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என நம்புகிறேன்’’ என அதிபர் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதிபர் குறிப்பிடும் நகரங்கள் பெரும்பாலானவை எதிர்க்கட்சி அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பவை. இந்த நகரங்களில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை ஒப்படைக்க எதிர்க்கட்சி அதிகாரிகள் மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory