» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு தளர்வு

திங்கள் 22, ஏப்ரல் 2019 10:44:49 AM (IST)



இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த குண்டு வெடிப்புகளில் 215 பேர் பலியானார்கள். அவர்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, டென்மார்க், ஜப்பான், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவார்கள்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. கொழும்புவில் உள்ள இரண்டு இடங்களில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory