» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கையில் துப்பாக்கிச்சண்டையில் 15 பேர் பலி: தொடரும் பதற்றம் - ஊரடங்கு உத்தரவு

சனி 27, ஏப்ரல் 2019 5:10:59 PM (IST)இலங்கை கல்முனை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 15 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தையடுத்து இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையில் மறைந்துள்ளதாக அதிபர் சிறீசேனா நேற்று தெரித்தார். 

இந்நிலையில் கல்முனை அருகே வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக சிறப்பு அதிரடிப் படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த அதிரடிப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையே நடைபெற்ற சண்டையின்போது வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உட்பட 15 பேர் பலியாகினர். இதனிடையே வெள்ளவத்தை ரயில் நிலையம் அருகே ஒரு கிலோ வெடிபொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்நிலையில், இலங்கையில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தையடுத்து இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மட்டக்களப்பின் கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory