» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கைக்கு இந்திய படை வீர்ர்களை அனுப்ப வேண்டிய அவசியமில்லை: ராஜபக்சே கருத்து

ஞாயிறு 28, ஏப்ரல் 2019 9:07:14 PM (IST)

இந்தியா தேசிய பாதுகாப்புப் படை வீர்ர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை என ராஜபக்சே கூறினார்.

இலங்கையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தடுக்க இந்தியா பல்வேறு முயற்சிகளை செய்தது. 3 முறை இந்தியா எச்சரிக்கை அனுப்பியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை செய்யாத காரணத்தினால் மிகவும் பயங்கரமான ஒரு தாக்குதலுக்கு இலங்கை ஆளானது. இதனிடையே அடுத்தடுத்த நகர்வுகளை கணித்து இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உளவுத் தகவல்களை வழங்கி வருகிறது. 

ஐ.எஸ், பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர். இதனால் இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணையை மேற்கொள்ள தீவிரம் காட்டுகிறது. ஏனென்றால் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹாசிம், இலங்கை, தமிழகம், கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் இப்பகுதியில் இஸ்லாமிய அரசை நிறுவ போராட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். கேரளா, தமிழ்நாட்டில் நுண்ணறிவு பிரிவு போலீசார் உஷார் நிலையில் நகர்வுகளை ஆய்வு செய்கிறார்கள். 

கோவையில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் சிக்கிய தகவலின் அடிப்படையிலே இலங்கைக்கு எச்சரிக்கையை விடுத்தோம் என்கிறது தேசிய புலனாய்வு பிரிவு. இதனால் இலங்கைக்கு செல்ல இந்திய உள்துறை அமைச்சகத்திடம் தேசிய புலனாய்வு பிரிவு அனுமதி கோரலாம் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசியுள்ள முன்னாள் அதிபர் ராஜபக்சே, இந்தியா உதவிகளை செய்து வருகிறது. ஆனால் தேசிய பாதுகாப்பு படைகளை அனுப்ப வேண்டிய அவசியமில்லை. எங்களுக்கு வெளிநாட்டு படை வீரர்கள் தேவையில்லை. எங்களுடைய படைகளே போதுமானது. நாங்கள் அவர்களுக்கு அதிகாரமும், சுதந்திரமும்தான் கொடுக்க வேண்டும் என ராஜபக்சே கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory