» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையின் புதிய காவல்துறை போலீஸ் தலைவர், பாதுகாப்புத் துறை ஆலோசகர் நியமனம்
திங்கள் 29, ஏப்ரல் 2019 4:57:24 PM (IST)
இலங்கையின் புதிய காவல்துறை தலைவர் மற்றும் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஆகியோரை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்தார்.

இதையடுத்து அந்நாட்டின் பாதுகாப்புத்துறை ஆலோசகர் ஹேமஸ்ரீ ஃபெர்னாண்டோ மற்றும் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா ஆகியோர் ராஜிநாமா செய்ய அறிவுறுத்தப்பட்டனர். மேலும் இலங்கையில் முகாமிட்டிருந்த 140-க்கும் மேற்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளில் 70 பேர் வரை அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், முன்னாள் காவல்துறை தலைவர் என்.கே.இளங்ககூன், பாதுகாப்புத்துறை ஆலோசகராகவும், தற்போதைய காவல்துறை துணைத்தலைவர் சி.டி.விக்ரமரத்னே, இலங்கை காவல்துறையின் புதிய தலைவராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இவர்களை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா திங்கள்கிழமை அறிவித்துள்ளதாக அதிபர் மாளிகை தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காஷ்மீரில் மனித உரிமைக்கு பாதுகாப்பு இல்லை இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தீர்மானம் தாக்கல்
ஞாயிறு 8, டிசம்பர் 2019 5:48:28 PM (IST)

நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தானுக்கு 9,360 கோடி அவசர கடன்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு!
சனி 7, டிசம்பர் 2019 12:30:50 PM (IST)

நித்யானந்தாவிற்கு அடைக்கலம் வழங்கவில்லை; தீவு எதையும் விற்கவில்லை: ஈகுவடார் மறுப்பு
வெள்ளி 6, டிசம்பர் 2019 5:51:51 PM (IST)

அதிபர் டிரம்ப் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்
வியாழன் 5, டிசம்பர் 2019 8:28:43 AM (IST)

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக கமலா ஹாரிஸ் அறிவிப்பு
புதன் 4, டிசம்பர் 2019 12:13:49 PM (IST)

தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு - 12பேர் விடுதலை!!
புதன் 4, டிசம்பர் 2019 11:56:07 AM (IST)
