» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இஸ்லாமியப் பெண்கள் முகத்தை முழுதாக மூடும் புர்கா அணியத் தடை: இலங்கை அரசு உத்தரவு !

திங்கள் 29, ஏப்ரல் 2019 5:45:35 PM (IST)

இஸ்லாமியப் பெண்கள் தங்கள் முகத்தை முழுதாக மூடும் புர்கா அணிவதற்கு இலங்கை அரசு விதித்துள்ள தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 

ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கொழும்பின் தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்படுத்திய அதிர்ச்சி இலங்கையில் இன்னும் தொடர்கிறது. கிழக்கு இலங்கையில் பல இடங்களில் ராணுவத்தினரின் சோதனைகள் தொடர்கின்றன. அவற்றின் மூலம் பல்வேறு இடங்களில் வெடிபொருட்கள் குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டுவருகின்றன.

இந்த குண்டு வெடிப்புக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அமைப்பே காரணம் என இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் குண்டு வெடிப்புக்குத் தொடர்புடையவர்கள்கூட புர்கா அணிந்து செல்வதன் மூலம் விசாரணையிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள் என்று ராணுவம் அரசுத் தரப்பிடம் முறையிட்டது.

இந்நிலையில் நேற்று மாலை இலங்கை அதிபர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாட்டில் அவசர நிலை அமலில் இருக்கும் நிலையில் அதன் விதிமுறைகளின்படி சாலையில் யார் சென்றாலும் அவர் இன்னாரென்று அடையாளம் தெரிந்திட வேண்டும். ஆனால் முகத்தை முழுதாக மூடும் புர்கா அணிவதன் மூலம் எளிதாக அடையாளம் கண்டுகொள்வது தடுக்கப்படும். எனவேதான் பாதுகாப்புக் காரணங்களுக்காக, முகத்தை மூடியபடி அணியும் எந்த வகையான உடையும் ஏப்ரல் 29 திங்கள் முதல் தடை செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே அகில இலங்கை ஜமாயத்துல் உலமா போன்ற முஸ்லிம் இயக்கங்களே, "நாட்டில் நிலவும் சூழலை உணர்ந்து ராணுவம், போலீஸாருக்கு உதவும் வகையில் புர்கா அணிய வேண்டாம்” என்று இஸ்லாமியப் பெண்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.


மக்கள் கருத்து

இவன்Apr 30, 2019 - 09:51:20 PM | Posted IP 172.6*****

sami அவர்களுக்கு.... இந்திய பெண்கள் எந்த மதமாக இருந்தாலும் சேலை தான் நம்ம கலாசாரம். சில இஸ்லாமிய பெண்களுக்கு விடுதலை இல்லை . எல்லாம் பெண்ணடிமை...

samiApr 30, 2019 - 05:09:45 PM | Posted IP 172.6*****

எவர் மனமும் புண்படும்படி கருத்து போடாதீர்கள் - முஹம்மதியர்களுக்கு அவர்களுக்காக பழக்கம் இருக்கிறது அதை அவர்கள் கடைபிடிக்கிறார்கள் - நாம்தான் நமக்கான பல பழக்கங்களை விட்டுவிட்டோம்

மனிதன்Apr 30, 2019 - 04:35:23 PM | Posted IP 172.6*****

மானங்கெட்ட அரேபிய கலாசாரம் இங்கு தேவை இல்லை ...

நிஹாApr 30, 2019 - 11:31:36 AM | Posted IP 172.6*****

சபாஷ். இந்தியாவில் இதுபோல சட்டம் போட்டிருந்தால் நடுநிலைமையாளர்கள் என சொல்லிக்கொண்டு பலர் வசைபாடியிருப்பார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory