» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பயங்கரவாதத்தை இந்தியாவிற்கு எதிரான கருவியாக பாக். பயன்படுத்துகிறது: சிஐஏ மாஜி அதிகாரி

வெள்ளி 3, மே 2019 4:21:20 PM (IST)

இந்தியாவிற்கு எதிரான கருவியாக பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயன்படுத்துகிறது என அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் உலகில் பயங்கரவாத மையமாக செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்டாலும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம், ஆப்கானிஸ்தானுக்கு எட்திரான பயங்கரவாதம் அங்கு செயல்பட அனுமதிக்கப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக மறைமுகமான வகையில் போரை முன்னெடுக்க பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ. இதனை செய்து செய்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை இந்தியாவிற்கு எதிரான கருவியாக பயன்படுத்துகிறது என அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மிச்சல் மோரெல் கூறியுள்ளார். "இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தில் ஆயுதமாக பயன்படுத்த பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்களை உருவாக்குகிறது,” என மோரெல் கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற பயங்கரவாத குழுக்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பதை பாகிஸ்தான் உணவில்லை. எனவே அவர்களுக்கே பயங்கரவாத இயக்கங்கள் அடி கொடுக்கிறது. கடைசியில் பாகிஸ்தான் உலகின் மிகவும் ஆபத்தான நாடாக மாறும் என்றே நான் நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார் மிச்சல் மோரெல்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory