» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷியாவில் பயணிகள் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்து : 41பேர் உடல் கருகி பலி!!

திங்கள் 6, மே 2019 11:10:13 AM (IST)மாஸ்கோ விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய பயணிகள் விமானத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 41பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

ரஷியத் தயாரிப்பு சூப்பர் ஜெட்-100 ரகத்தை சேர்ந்த அந்த பயணிகள் விமானம், மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ விமான நிலையத்தில் இருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட 27 நிமிடத்தில் அபாய சிக்னலை வெளியிட்டது. பின்னர் அதே விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. முதலில் அந்த விமானத்தை தரையிறக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து 2ஆவது முறையாக விமானத்தை மீண்டும் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது முன்பகுதி தரையில் உரசியபடி விமானம் தரையிறங்கியது. 

இதில் விமானம் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனையடுத்து, விமானத்தில் இருந்த பயணிகள் அவசரபாதை வழியாக உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்தில் முதலில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், 37 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 2 சிறார்கள் உட்பட 41 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory