» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாதுகாப்பு ரகசியத்தை திருடியதாக கைதான 2 செய்தியாளர்களை விடுவித்தது மியான்மர் அரசு!!

செவ்வாய் 7, மே 2019 11:04:17 AM (IST)நாட்டின் பாதுகாப்பு ரகசியத்தை திருடியதாக கைதான ராய்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரையும் விடுவித்தது மியான்மர் அரசு

மியான்மரில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மியான்மர் ராணுவத்துக்கும், ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தின் பொழுது, ரஹின் மாகாணத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்கள். அப்பொழுது அந்தப் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார்கள்.

பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி அவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ஆவணங்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக  கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு உதவியாக இருந்த காவலரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் பிணையில் கூட விடுவிக்கப்படாமல், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கானது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாகும் என சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் இருவர் மீதான வழக்கை விசாரித்த மியான்மரின் யங்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி ஏய் வின், அரசாங்க ரகசிய சட்டங்களை மீறி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள்  வா லொன்(32) மற்றும் க்யூ ஸோ ஓஓ,( 28)  இருவரும் ரகசிய ஆவணங்களை சேகரித்து உள்ளனர் என உறுதி செய்தார்.அத்துடன் குற்றவாளிகள்  அரசு ரகசிய  சட்ட பிரிவு 3.1(சி)-யை மீறி உள்ளதால் அவர்களுக்கு  ஏழு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அதே நேரம் டிசம்பர் 12 ல் இருந்து குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் அடைக்கபட்ட காலம் கருத்தில் கொள்ள வேண்டும் என தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். இது குறித்து ராய்ட்டர்ஸ் தலைமை ஆசிரியர் ஸ்டீபன் ஜே அட்லெர் கூறுகையில், இன்று மியான்மரில் ஒரு சோகமான நாள். ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவருக்கு மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள செய்தி ஊடகங்களுக்கும்தான் என தெரிவித்திருந்தார்.  இதனிடையே, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பத்திரிகையாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மியான்மர் அரசுக்கு பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இதே கருத்தை இங்கிலாந்து, ஸ்வீடன், வங்காளதேசம் ஆகிய நாடுகளும் வலியுறுத்தி வந்தன.  பத்திரிகை சுதந்திரம் மீது நடத்தப்பட்ட தாக்குதல். எனவே தங்களது செய்தியாளர்களை மியான்மர் அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராய்ட்டர்ஸ் நிறுவனம் கோரி வந்தது. இந்நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ ஆகியோரை மியான்மர் அரசு இன்று விடுவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory