» செய்திகள் - விளையாட்டு » உலகம்

குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு இலங்கையை ஐ.எஸ். தேர்வு செய்தது ஏன்? சிறிசேனா விளக்கம்

செவ்வாய் 7, மே 2019 11:54:03 AM (IST)

"இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்தவே இலங்கையை ஐ.எஸ். அமைப்பு தேர்வு செய்திருக்கலாம்" என அதிபர் சிறிசேனா விளக்கம் அளித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் 253 பேர் உயிரிழந்தனர்.  500 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.  ஆனால், ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய தேசிய தவ்ஹீத் ஜமாத் (என்.டி.ஜே.) மற்றும் ஜமாதி மிலாது இப்ராகீம் என்ற பிரிவினைவாத குழு மீது அரசு குற்றச்சாட்டு தெரிவித்தது.  தொடர்ந்து, அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த வாரம் இந்த இரு அமைப்புகளையும் தடை செய்து உத்தரவிட்டார்

இந்நிலையில் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இலங்கை அதிபர் சிறிசேனாவிடம், ஐ.எஸ். அமைப்பினர் தாக்குதலை அரங்கேற்ற இலங்கையை தேர்வு செய்ய காரணம் என்ன? என கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர் பதிலளித்தபோது, நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நான் மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறேன். ஐ.எஸ். அமைப்பு ஏன் இலங்கையை தேர்வு செய்தது? என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஐ.எஸ். அமைப்பால் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளை எதிர்க்க முடியவில்லை. எனவே தாங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்தவே இலங்கையை அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory