» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் பள்ளியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி - 7 மாணவர்கள் படுகாயம்!!

புதன் 8, மே 2019 10:31:51 AM (IST)அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்தார். 7பேர் படுகாயம் அடைந்தனர். 

அமெரிக்காவின் டென்வர் புறநகர் பகுதியில் ஸ்டீம் ஸ்கூல் ஹைலேண்ட் ரான்ச் என்ற பள்ளியில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2 மணியளவில் பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுடன் ஆபத்த நிலையில் 8 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஒரு மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 7பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக 2 பேர் பிடிபட்டுள்ளதாகத் தெரிவித்த அதிகாரிகள், முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டுள்ள 2 பேரும் மாணவர்கள் என்பதும், அவர்களில் ஒருவன் 15 வயதிற்கும் குறைவான சிறுவன் என தெரிவந்துள்ளது. தொடர்ந்து அவர்களின் விசாரணை நடைபெற்று வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory