» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் வழிபாட்டு தலம் அருகே குண்டு வெடிப்பு: 9பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் படுகாயம்

புதன் 8, மே 2019 12:26:42 PM (IST)பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வழிபாட்டுத்தலம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் 9பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரத்தில் உள்ள சூஃபி புனித தலம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 9பேர் உயிரிழந்துள்ளதாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரம்ஜான் நோன்பு துவங்கியுள்ள நிலையில், வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டதா? என்பதை இப்போதே உறுதி செய்ய முடியாது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலை தொடர்ந்து தாதா தர்பார் தலத்தின் நுழைவு வாயில் சீல் வைக்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு இந்த தலத்தை குறிவைத்து, தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.


மக்கள் கருத்து

தனி ஒருவன்மே 9, 2019 - 10:19:10 AM | Posted IP 172.6*****

மனித மிருகங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory