» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நவாஸ் செரீப்பை பேரணியாக அழைத்துச் சென்று சிறையில் ஒப்படைத்த தொண்டர்கள்!!

புதன் 8, மே 2019 3:46:31 PM (IST)



பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பை அவரது கட்சியினர் பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார். உடல் நிலையை காரணம் காட்டி சிகிச்சை பெறுவதற்காக உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26ம் தேதி முதல் 6 வாரத்துக்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் தனக்கு நிரந்தர ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையே அவரது ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே அவர் கோட் லக்பத் சிறைக்கு மீண்டும் திரும்பினார்.  அவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினர் வீட்டில் இருந்து பேரணியாக அழைத்து சென்று சிறையில் ஒப்படைத்தனர். பேரணியில் ஏராளமான கார்கள் மற்றும் லாரிகள் இடம் பெற்றன.

முன்னால் சென்ற காரில் நவாஸ்செரீப் அமர்ந்து இருந்தார். அவருடன் மகள் மரியம், தம்பி மகன் ஹம்சா ஷெபாஸ் ஆகியோர் அமர்ந்து இருந்தனர். பட்டாசு மற்றும் வாண வேடிக்கையுடன் நடைபெற்ற இப்பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தொண்டர்கள் வாகனங்களில் கலந்து கொண்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணி இரவில் சிறையை சென்று அடைந்ததும், சிறை அதிகாரிகளிடம் நவாஸ் ஒப்படைக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory