» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் மீது மேலும் சில பொருளாதார தடைகள் விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வியாழன் 9, மே 2019 11:49:22 AM (IST)

ஈரான் மீது மேலும் சில பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொள்வதற்காக அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகள் சிலவற்றை மீற இருப்பதாக ஈரான் அதிரடியாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், ஈரானுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும் நோக்கில், ஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகள் மீது புதிய தடைகளை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

இது குறித்து வெள்ளை மாளிகை கூறும் போது, " எண்ணெய் வளத்துக்கு அடுத்தபடியாக ஈரானுக்கு அதிக அளவு வருவாய் கொடுக்கும் துறைகளை இலக்காக்கியுள்ளோம். தனது நடத்தைகளை மாற்றிக்கொள்ளாதபட்சத்தில், மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஈரான்  எதிர்பார்க்க வேண்டியதுதான்” என்று தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory