» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடியை பிரிவினைவாதி என விமர்சித்து அமெரிக்காவின் டைம் இதழ் தலையங்கம்

வெள்ளி 10, மே 2019 5:32:17 PM (IST)

மக்களவைத் தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை பிரிவினைவாதி என சாடி டைம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் சூடுபிடித்திருக்கும் நிலையில், அமெரிக்காவில் இருந்து வெளியாக உள்ள மே 20ம் தேதியிட்ட டைம் இதழின் அட்டைப் படத்தில் காவித் துண்டுடன் பிரதமர் நரேந்திர மோடியின் மிக அழுத்தமான ஓவியம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அதன் முகப்பில் Indias Divider in Chief என்று சர்ச்சைக்குரிய வகையில் தலைப்பிடப்பட்டுள்ளது.  இது இந்தியாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அந்த இதழில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமரிசித்து தலையங்கமும் எழுதப்பட்டுள்ளது.  2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ள டைம் இதழ், 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தியது. 

இந்நிலையில் இந்திய தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை சாடி வெளியாகியுள்ள கட்டுரையால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. டைம் இதழில் மோடிக்கு எதிராக தலையங்கம் வெளியாகியிருப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே 2012ம் ஆண்டு நரேந்திர மோடி குறித்து மிகக் கடுமையான விமரிசனங்களோடு கட்டுரை வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

தமிழன்-மே 11, 2019 - 07:36:40 PM | Posted IP 172.6*****

அமெரிக்கானுக்கே உண்மை தெரியுது.., இங்க உள்ள மீடியா க்கு பாக்கெட் நிறைஞ்ச போதும் ...

பாலாமே 11, 2019 - 11:08:16 AM | Posted IP 162.1*****

உண்மையான செய்தி.. அங்கு ஊடகங்கள் அனைத்தும் சிறப்பாக செயல் படுகிறது. இந்தியாவைப்போல் கூத்தாடிகள் பின்னேயும் ஆளும்கட்சியின் பின்னையும் செல்வதில்லை..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory