» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஆஸ்திரேலிய கரன்சியில் எழுத்து பிழை: ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்தது!!

சனி 11, மே 2019 4:03:24 PM (IST)ஆஸ்திரேலிய கரன்சியில் எழுத்து பிழையுடன் புழக்கத்திற்கு வந்துள்ள நிலையில் அந்நாட்டு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது!! 

ஆஸ்திரேலியாவில், முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் எடித் கோவானை சிறப்பிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், புதிய 50 டாலர் நோட்டுகளை அந்நாட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த டாலர் நோட்டில் கோவானின் உருவத்தின் பின்னணியில், நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய முதல் உரையின் வரிகள் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் RESPONSIBILITY என்ற வார்த்தை தவறுதலாக RESPONSIBILTY  என்று அச்சிடப்பட்டுள்ளது. 

தற்போது சுமார் 46 கோடி, 50 டாலர் நோட்டுகள் நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ளன. நோட்டு அச்சிடப்பட்டு பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அதில் உள்ள பிழை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 டாலர் நோட்டில் எழுத்து பிழை இருப்பதை ஒப்புக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, இந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது. அதே சமயம் புழக்கத்தில் இருக்கும் 50 டாலர் நோட்டுகளை மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்படாது என்றும், வரும் காலங்களில் அச்சிடப்படும் டாலர் நோட்டுகளில், இந்த பிழை சரி செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory