» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வடகொரியா ஏவுகணை சோதனை அமெரிக்காவுக்கு எதிரானதல்ல: அதிபர் டிரம்ப் விளக்கம்

ஞாயிறு 12, மே 2019 9:23:40 AM (IST)

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் அமெரிக்காவின் நம்பகத்தன்மைக்கு எதிரானதாக நான் கருதவில்லை என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

அமெரிக்கா – வடகொரியா இடையே கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமில் நடந்த இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதை தொடர்ந்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனைகளை துவங்கியுள்ளது. கடந்த ஒருவார கால இடைவெளியில் இரண்டு முறை குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை ஏவி வடகொரியா சோதனை செய்துள்ளது. வடகொரியாவின் இந்த செயல் ஏற்க கூடியது அல்ல என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் கொரிய பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகொரியா விவகாரம் குறித்து பொலிட்டிகோ பத்திரிகைக்கு அதிபர் டிரம்ப் பேட்டியளித்துள்ளார். அதன் விவரம்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடன் எனக்கு நல்ல உறவு உள்ளது. ஆனால் அதேசமயம் அவர் மீதான நம்பிக்கையை நாளடைவில் இழப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் இப்போது அவர் மீது நம்பிக்கை உள்ளது. வடகொரியா ஏவியது வெறும் குறுகிய தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள். எனவே இந்த சோதனை வட கொரியாவின் நம்பகத்தன்மைக்கு எதிரானதாக நான் கருதவில்லை என்று அதிபர் டிரம்ப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory