» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தைவான் அரசு அங்கீகாரம்: ஆசியாசில் முதல் முறை!!

வெள்ளி 17, மே 2019 5:36:57 PM (IST)



ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு தைவான் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது..

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது. இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
 
இதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும், எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தைவான் பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory