» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புனித மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது!!

திங்கள் 20, மே 2019 4:10:42 PM (IST)



இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபிய ராணுவம் இடைமறித்து  தகர்த்துள்ளது.

ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில், ஏமன் அதிபர் மன்சூர் ஹதிக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போர் புரிந்து வருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களில் பெரும்பாலானோர் ஷியா முஸ்லிம்கள் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் பெற்றிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளிக்கிறது. ஆயுதங்கள், பயிற்சிகள் அளிக்கிறது.

அவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் சவுதி ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடிக்கும். இந்நிலையில், கடந்த மே 14-ம் தேதி சவுதி  அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை, தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர். அபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் பைப் லைன் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. சவுதி அரேபியா மெக்காவில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில்  உள்ள தயிப் மற்றும் ஜெட்டா நோக்கி வந்த  ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. சவுதி அரேபியா அவசர பிராந்திய பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தது. ஈரானுடனான் போரை விரும்பவில்லை, ஆனால் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள தயாராக உள்ளது என்று கூறி உள்ளது.


மக்கள் கருத்து

பிம்பிலிகா பிளாப்பிமே 21, 2019 - 05:11:49 PM | Posted IP 172.6*****

ஆமாம் - எம்பெருமான் சிவன் கழுத்தில் இருப்பதும் விசம்தான் - அது மக்களை காப்பதற்காக

தனி ஒருவன்மே 21, 2019 - 12:09:48 PM | Posted IP 108.1*****

மோடி ஒரு விஷம்

பிம்பிலிகா பிளாப்பிமே 20, 2019 - 04:56:03 PM | Posted IP 162.1*****

மோடி சொல்லித்தான் இது நடந்தது என்று எவனாவது கிறுக்கன் கருத்து எழுதுவான் பாருங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory