» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய் 21, மே 2019 12:54:52 PM (IST)இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார். 

இந்தோனேஷிய நாட்டின் வரலாற்றிலேயே, அதிபர், துணை அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரே நாளில் நடைபெறும் முதல் தேர்தல் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 19 கோடி வாக்காளர்கள் பங்கு பெற்ற இந்தத் தேர்தலில், அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவை எதிர்த்து, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பிரபோவோ சுபியான்டோ போட்டியிட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்றாகும். 

இந்த வரிசையில், இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அந்த நாடு மூன்றாவது இடத்தை வகித்து வரும் இந்தோனேசிய அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை நிலையில்,  ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜோகோ விடோடோவிற்கு 55.5 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியான்டோவுக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தல் ஆணையம் முடிவுகலை அறிவுத்துள்ள நி்லையில், ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது அதிபர் பதவியை தக்க வைத்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory