» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சகோதரர்களுக்கு இடையே பிரச்னை வருவது இயற்கை : டோக்லாம் விவகாரம் குறித்து சீன தூதர்

புதன் 22, மே 2019 4:17:51 PM (IST)

"இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டது சகோதரர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை போன்றது" என இந்தியாவுக்கான சீன தூதர் லோ சௌஹுய் தெரிவித்தார். 

இந்தியா, பூடான், சீனா ஆகிய 3 நாடுகளின் எல்லைப் பகுதிகள் சந்திக்கும் இடமாக அமைந்துள்ள டோக்லாமில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியா, சீனா ராணுவத்தினர் இடையே சண்டை ஏற்பட்டு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து இரு நாடுகளின் ராணுவமும் அங்கு வீரர்களை குவிக்க ஆரம்பித்தது. மேலும் டோக்லாம் பகுதியை சீனா சொந்தம் கொண்டாட முயன்றது. இருப்பினும் இந்திய ராணுவம் அங்கு முகாமிட்டதால் பின்னர் சீன ராணுவம் அங்கிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டது. பின்னர் சீன அதிபருடன் இந்திய பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையில் இப்பிரச்னை சமாதானம் ஆனாது.

இந்நிலையில், இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டது பங்காளிப் பிரச்னை போன்றது தான் என்று இந்தியாவுக்கான சீன தூதர் லோ சௌஹுய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இரு நட்பு நாடுகளுக்கு இடையே பிரச்னை வருவது இயற்கையானது தான். இது ஒரே வீட்டில் குடியிருக்கும் சகோதரர்களுக்கு இடையிலான பிரச்னை போன்றது தான். இந்தியா, சீனா இடையே டோக்லாமில் ஏற்பட்டதும் இதுபோன்ற பங்காளிப் பிரச்னை தான். சுமார் 2 ஆயிரம் வருடங்களுக்கும் மேலான குடும்ப வாழ்க்கையில் இதுபோன்ற சிறு பிரச்னைகள் அவ்வப்போது ஏற்படுவது சகஜமானது. அதற்காக அந்த பிரச்னைகளை அலட்சியமாக புறக்கணிக்கப்பட்டதில்லை. இருதரப்பும் இணைந்து பேசி அதற்கு முடிவு ஏற்படுத்தியுள்ளது. அதனால் தான் இந்தியா, சீனா இடையிலான நட்பு சுமூகமாக தொடர்கிறது என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

நிஹாமே 23, 2019 - 11:18:08 AM | Posted IP 172.6*****

அருமையான பேச்சு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory