» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி: பிரதமர் மோடிக்கு இம்ரான் கான் வாழ்த்து

வெள்ளி 24, மே 2019 12:13:26 PM (IST)

மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக, இம்ரான் கான் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, வளர்ச்சி, வளம் ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடி நன்றி 

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். நல்வாத்துகளை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் பகுதியில் அமைதி மற்றும் வளர்ச்சிக்காவே நான் எப்போதும் முன்னுரிமை அளித்துள்ளேன் என்று பிரதமர் மோடி பதிலளித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory