» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தால் நெருக்கடி: இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா அறிவிப்பு!!

வெள்ளி 24, மே 2019 3:42:06 PM (IST)

லண்டன் பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தின் நெருக்கடி எதிரொலியாக ஜூன் 7 - ஆம் தேதி ராஜினாமா செய்யய உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் கடந்த மார்ச் 29-ஆம் தேதியுடன் விலக முடிவு செய்திருந்தாலும், அதுதொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் ஏற்பதில் இழுபறி நீடித்து வந்தது. எனவே இதுதொடர்பான காலக்கெடு  வரும் அக்டோபர்  31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பிரெக்ஸிட் விவகாரத்தை பிரதமர் தெரசா மே கையாளும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்துக்கான அரசின் பிரதிநிதியாக பொறுப்பு வகித்து வந்த ஆண்ட்ரியா லெட்ஸம் சமீபத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.  

இதன் காரணமாக தெரசா மேக்கு நெருக்கடி அதிகரித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில் பிரெக்ஸிட் ஒப்பந்த விவகாரத்தின் காரணமாக ஜூன் 7 - ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே அதிரடியாக அறிவித்துள்ளார். பிரெக்ஸிட் விவகாரத்தில் பிரிட்டன் நாடாளுமன்ற ஒப்புதலை பெற முடியாததால் ராஜிநாமா செய்யய உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Tirunelveli Business Directory