» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்கி உள்ளோம்: மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து!!

வெள்ளி 24, மே 2019 4:12:31 PM (IST)

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதற்காக மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் 2-வது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடிக்கிறது. 325க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இரண்டாவது முறையாக தொடர்ந்து பிரதமராக உள்ள மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின், பாக். பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஜி ஜிங்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘இந்த மிகப் பெரிய தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு அவரது கட்சிக்கும் வாழ்த்துக்கள். நமது முக்கிய பணிகளை உங்களுடன் ஒன்றினைந்து செய்வதற்கு எதிர் நோக்கி உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory