» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரான்சில் குண்டுவெடிப்பில் 13 பேர் காயம்: பயங்கரவாத அமைப்பு தொடர்பா?

சனி 25, மே 2019 12:48:52 PM (IST)பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோன் நகரில் நேற்று மாலை நடைபெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். லியோன் நகரின் மையப்பகுதியில் விக்டர் ஹியூகோ வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், வெடிகுண்டு அடங்கிய பார்சல் ஒன்றை, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த மதிவண்டி ஒன்றில் வைத்ததாக கூறப்படுகிறது. 

இந்தக்குண்டு வெடிப்பு தொடர்பான ஒரு சந்தேக நபரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். தாக்குதலுக்கு பயங்கரவாத தொடர்பு இருக்குமா? கோணத்திலும் விசாரணை நடப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து மக்கள் வெளியேற்றபட்டு பிரான்ஸ் ராணுவத்தினரால் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory