» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் வாழ்த்து

ஞாயிறு 26, மே 2019 8:42:15 PM (IST)

பிரதமர் நரேந்திர மோடியை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி பெற்ற மாபெரும் வெற்றிக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஏற்கெனவே டுவிட்டரில் வாழ்த்து கூறியிருந்தார். 

தெற்கு ஆசியாவில் அமைதி, முன்னேற்றம், வளவாழ்வு என்ற லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று இம்ரான் கான் கூறியிருப்பதாக, பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பைசல் அவரது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மோடியும்  இம்ரான் கானும் அடுத்த மாதம் கிர்கிஸ்தான் நாட்டின் பிஷ்கேக் நகரில் நடைபெற இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டில் சந்திக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory