» செய்திகள் - விளையாட்டு » உலகம்

புதிய இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாக். வெளியுறவுத்துறை அமைச்சர்

திங்கள் 27, மே 2019 11:58:53 AM (IST)

புதிதாக அமைந்துள்ள இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹமுத் குரேஷி தெரிவித்தார். 

இதுதொடர்பாக பாகிஸ்தானின் முதல்தான் நகரில் நடந்த இஃப்தார் விருந்தின் போது அவர் கூறியதாவது: இந்தியாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசுடன், இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அரசு தயாராக உள்ளது. எனவே இரு நாடுகளும் இணைந்து அமர்ந்து பேசி அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றார்.

முன்னதாக, 17-ஆவது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு முந்தைய தினம் ஷாங்காய் மாநாட்டில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்-ஐ சந்தித்த பாக். வெளியுறவத்துறை அமைச்சர் குரேஷி, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் சுமூகமாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory