» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகள் பயங்கர மோதல்: கலவரத்தில் 40 பேர் பலி!!

செவ்வாய் 28, மே 2019 3:27:26 PM (IST)பிரேசில் நாட்டில் 4 சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 40 கைதிகள் கொல்லப்பட்டனர்.

பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தில் போதை பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் உள்ளது. இதனால் அங்கு குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் அங்குள்ள சிறைகளில் கைதிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் நேற்று அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாயஸ்சில் உள்ள 4 சிறைகளில் கைதிகள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சிறைகள் அனைத்தும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

அதில் ஒரு சிறையில் மட்டும் 15 பேர் உயிரிழந்தனர். மற்ற சிறைகளில் 25 பேர் பலியாகினர். இந்த கலவரத்தில் மொத்தம் 40 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த தகவலை அறிந்து கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை முன் குவிந்து கதறி அழுதனர். சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த போதை பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது என அதிகாரிகள் தெரிவித்தனர். உலகிலேயே அதிக கைதிகள் நிறைந்த சிறையாக பிரேசில் திகழ்கிறது. இங்கு மொத்தம் 3 லட்சத்து 68 ஆயிரத்து 49 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory