» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஜப்பானில் குழந்தைகள் மீது மர்ம நபர் சராமாரிக் கத்திக்குத்து: 2 சிறுமிகள் உயிரிழப்பு - 16பேர் காயம்

செவ்வாய் 28, மே 2019 4:05:44 PM (IST)



ஜப்பானில் பள்ளிச் சிறுமிகள் மீது மர்ம நபர் கண்மூடித்தனமாக நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் 2 சிறுமிகள் உயிரிழந்தனர்.

ஜப்பானில் உள்ள கவாஸாகி எனும் நகரத்தில் இன்று காலை 57 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் 2 கத்திகளுடன் வந்து பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பள்ளிச் சிறுமிகள் மீது கண்மூடித்தனமாக தாக்கினான். பின்னர் தானும் அதே கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டான்.

இந்த அசம்பாவித சம்பவத்தில் 3 சிறுமிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, 16 சிறுமிகளுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 சிறுமிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் கொலை நடந்த காட்சிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory