» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் - நிக்கி ஹாலி

வியாழன் 30, மே 2019 11:56:19 AM (IST)

இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் என  ஐ.நா. சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி கூறியுள்ளார். 

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்லுறவு உள்ளது. அமெரிக்க அதிபர்டிரம்பும், பிரதமர் நரேந்திர மோடியும் பல முறை சந்தித்து பேசி உள்ளனர். இப்போது நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினார்.

இந்நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மோர்கன் ஆர்ட்டகஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்தியா மிகப்பெரும் கூட்டாளி. மோடியின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில், இந்திய வெளியுறவுத்துறை மந்திரியுடன் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து வலுவான விவாதங்கள் நடத்த அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வாய்ப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறார்” என குறிப்பிட்டார்.

"மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள மோடியுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றுமா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மோர்கன் ஆர்ட்டகஸ் பதில் அளிக்கையில், "நிச்சயமாக நாங்கள் பல முறை இணைந்து செயல்பட்டதுபோல மோடியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவோம்” என கூறினார். தொடர்ந்து அவர் பேசும்போது, "இந்தியாவில் நடந்த தேர்தலின் நேர்மை குறித்து எங்களுக்கு நம்பிக்கை உண்டு” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே ஐ.நா. சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "இந்தியா தொடர்ந்து வியக்கத்தக்க திறனையும், அமெரிக்காவின் மிகப்பெரும் கூட்டாளியாகவும் திகழ்கிறது. தேர்தலில் பெற்ற அமோக வெற்றிக்காகவும், இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லும் பாங்குக்காகவும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். நமது ஒத்துழைப்பு தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory