» செய்திகள் - விளையாட்டு » உலகம்

மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்: இலங்கை அதிபர் சிறிசேனா

வெள்ளி 31, மே 2019 5:50:54 PM (IST)

பிரதமர் மோடி அடுத்த மாத துவக்கத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை அந்நாட்டு அதிபர் சிறிசேனா உறுதி செய்துள்ளார்.

இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, வெளிநாட்டுப் பயணத்தில் முதல் நாடாக மாலத்தீவு செல்கிறார். ஜூன் மாத துவக்கத்தில் மாலத்தீவு செல்லும் மோடி, அங்கிருந்து இலங்கைக்கு செல்ல உள்ளார். இத்தகவலை இலங்கை அதிபர் சிறிசேனா இன்று உறுதி செய்துள்ளார். டெல்லியில் மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனா பங்கேற்றார். அவரை மோடி இன்று சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேசினர்.
 
மோடியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிறிசேனா, மோடியின் இலங்கை பயணத்தை உறுதி செய்தார். இலங்கைக்கு இந்திய பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவரது வருகையை பெருமையாக கருதுவதாகவும் சிறிசேனா கூறினார். ‘மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் பயங்கரவாதம் பல்வேறு வடிவங்களில் தலை தூக்கி உள்ளது. சில நாடுகளில் உள்நாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர். உலகில் உள்ள அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்தால் தான் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்’ என்றும் சிறிசேனா கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory