» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நிபந்தனை இன்றி பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு: ஈரான் நிராகரிப்பு

திங்கள் 3, ஜூன் 2019 12:17:37 PM (IST)


நிபந்தனை இன்றி ஈரானுடன் பேச தயார் என்று அமெரிக்கா விடுத்துள்ள அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதன் காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் நீடிக்கிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் மத்திய கிழக்கு பகுதியில் தனது போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை குவித்து இருக்கிறது. இந்நிலையில், எந்த வித முன்நிபந்தனையும் இன்றி ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்பாம்பியோ கூறுகையில், "ஈரானுடன் அமர்ந்து பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். அந்நாட்டுடன் எந்த வித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தேவையானவற்றை செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது” என்றார். அதே சமயம் ஈரானின் தவறான நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடும் செயலை அமெரிக்கா தொடரும் என மைக்பாம்பியோ கூறினார். ஆனால், அமெரிக்கா வார்த்தை ஜாலம் காட்டும் வகையில்  பேசுவதாக ஈரான் கூறி, அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.


மக்கள் கருத்து

உண்மைதான்Jun 3, 2019 - 02:34:26 PM | Posted IP 108.1*****

மத கொலை வெறி பிடித்த நாட்டில் பிரச்னை தீர்க்க பேச்சுவார்த்தை மூலமா சமாதானம் பெற 500 ஆண்டுகள் ஆகும், ஒருபோதும் திருந்தப்போவதில்லை ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory