» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சவுதி அரேபிய மன்னரை அவமதித்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது குற்றச்சாட்டு!!

வியாழன் 6, ஜூன் 2019 5:48:41 PM (IST)சவுதி அரேபிய மன்னரை அவமரியாதை செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரானுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஒன்று சேர்க்கும் விதமாக சவுதி அரேபியாவில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்க சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்லாஸ் தனது மொழிபெயர்ப்பாளருடன் வரவேற்றார். அப்போது இருவரும் உரையாடிய நிலையில், மன்னரிடம் தெரிவிக்கும்படி மொழிபெயர்ப்பாளரிடம் ஏதோ கூறிவிட்டு இம்ரான் கான் அங்கிருந்து நழுவினார்.

இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில் இம்ரான் கான், மன்னரை அவமரியாதை செய்ததாகவும், கானின் நாகரீகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிகழ்வுக்கு பின் நடக்கவிருந்த இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் ரத்தானதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory