» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீன பொருட்கள் மீது மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

வியாழன் 6, ஜூன் 2019 5:50:44 PM (IST)

சீன பொருட்கள் மீது மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

சீனா - அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளும் ஒரு நாட்டின் பொருட்கள் மீது மற்றொரு நாடு வரி விதிப்பை அதிகப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து நிருபர்களிடம்  பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: சீனாவுடனான பேச்சுவார்த்தையில் பல ருசிகர சம்பவங்கள் நடந்துள்ளது, என்ன தான் நடக்கிறது என பார்க்கலாம். சீன பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு (இந்திய மதிப்பில்) வரி விதிப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதை சரியான தருணத்தில் அமல்படுத்த உள்ளோம் என்றார்.  ஆனால் எந்த பொருட்கள் மீது வரி விதிக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory