» செய்திகள் - விளையாட்டு » உலகம்

துபையில் சுற்றுலா பேருந்து விபத்து: 8 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி

வெள்ளி 7, ஜூன் 2019 12:53:39 PM (IST)துபையில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த எட்டு இந்தியர்கள் உட்பட 17 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

துபையில் ஐ ரஷிதியா மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே பேருந்துகள் நுழைவதற்கு வசதி இல்லா குறுகிய சாலையில் நுழைந்த ஆம்னி பேருந்து, சாலையோரம் இருந்த தடுப்பில் வேகமாக மோதியதில் பேருந்தில் இருந்த 17 பேர் பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். பேருந்தில் 31 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் வலது பக்கம் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேருந்து குறுகிய சாலைக்குள் நுழைந்த போது, பக்கவாட்டில் இருந்த தடுப்பில் மோதிய போது, பேருந்தின் வலது பக்கம் முழுமையாக சேதம் அடைந்தது. உயிரிழந்தவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களில் 8 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த ராஜகோபாலன், பெரோஸ் கான் பதான், ரேஷ்மா பெரோஸ் கான் பதான், தீபக் குமார், ஜமாலுதீன் அரக்கவீட்டில், கிரண் ஜான்னி, வாசுதேவ், திலக்ராம் ஜவகர் தாகூர் என்பது தெரிய வந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory